Tuesday, January 22, 2008

மும்பை பங்குச்சந்தை 2000 புள்ளிகள் சரிவு : வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது

தற்பொழுது மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 2,029 புள்ளிகள் சரிந்துள்ளது. வர்த்தகம் தொடங்கி சில நிமிடங்களில் இந்த சரிவு நிகழ்துள்ளது. வர்த்தகம் பெரிய அளவில் நடக்க வில்லை. முதல் மூன்று நிமிடங்களில் சுமார் 800 கோடி அளவுக்கு தான் வர்த்தகம் நடந்துள்ளது. அதற்குள்ளாகவே இத்தகைய பெரிய சரிவு. இந்தச் சரிவால் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய குறியீட்டு நிலவரம் - 15,576 : சரிவு 2,029 புள்ளிகள்

ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவும் கடும் சரிவு இந்தியப் பங்குச்சந்தையையும் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தை 30% அளவுக்கு சரிந்துள்ளது.

இதனால் பல பங்குகள் விலை குறைந்துள்ளதால், பங்குகளை வாங்குவதற்கு இது உகந்த நேரமாக இருக்கும். அதே நேரத்தில் மொத்தமாக நம்முடைய முதலீடுகளை நுழைக்க கூடாது. சிறுக சிறுக சந்தை நிலவரத்தை கணித்து நுழைக்க வேண்டும். சந்தையில் சரிவும், உயர்வும் அடுத்த சில நாட்கள் மாறி மாறி இருக்கும்.

வர்த்தகம் 10.55 மணி அளவில் மறுபடியும் தொடங்கும் பொழுது இன்னும் சரியுமா, உயருமா என்ற கவலை தான் பல முதலீட்டாளர்களுக்கு...

Let's keep our fingers crossed

3 comments:

புல்லிஷ் தமிழன் ( BULLISH TAMILAN) said...

இழந்த சரிவு ஓரளவிற்கு மீட்கப்பட்டுள்ளது.

தற்போதைய சென்சக்ஸ் நிலவரம் :

16,452 : -1,152 புள்ளிகள் சரிவு

Anonymous said...

//இதனால் பல பங்குகள் விலை குறைந்துள்ளதால், பங்குகளை வாங்குவதற்கு இது உகந்த நேரமாக இருக்கும். // sethuraman sathapan said Buy , when it went to 19000, now it is 16000, who knows what the bottom is 10,000?

Anonymous said...

dollar-rupee to reach 36 at end 2008 and 35 at end-2009 - economic times.

http://economictimes.indiatimes.com/Markets/Forex/Indian_rupee_climbs_after_stocks_pare_losses_/articleshow/2721611.cms